The Jungle Book
இந்தியாவில் நேற்று வெளியான ஜங்கிள் புக் திரைப்படம் கோடிகளில் வசூல் சாதனை படைத்துள்ளது.
1894ல்
வெளியான ஜங்கிள் புக் என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும்
இத்திரைப்படம் இந்திய காடுகளில் நடப்பதுபோன்ற கதையம்சம் கொண்டுள்ளது. எனவே
இந்தியாவில் நேற்று ரிலீஸாகி ஒரு நாளில் மட்டும் 9.76 கோடி சாதனை
படைத்துள்ளது.
இந்தப் படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், இந்தியக் காடுகளில் கதை நடப்பதால், முதன்முறையாக ஹாலிவுட் திரைப்படம், இந்தியாவில் முதலில் ரிலீஸாகி, ஒரு வாரம் கழித்து ஏப்ரல் 14ம் தேதி தான் அமெரிக்காவில் ரிலீஸாகிறது.
இப்படத்தில் நடித்திருக்கும் ஒரே கதாபாத்திரம் நீல் சேத். அச்சிறுவனும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர், அமெரிக்காவில் வாழ்ந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருவதால், உலகளவில் ரிலீஸாகும்போதும் நிச்சயம் பெரிய வெற்றியையும், வசூல்சாதனையும் படைக்கும்.

கதை
சிறுவயதிலிருந்தே ஒநாய்களோடு வளரும் குட்டிப் பையன் மௌக்லியை, ராக்ஷா என்ற
பெண் ஓநாய், தன் மகனாகவே வளர்க்கிறாள். வறட்சி காலத்தில்,அனைவருக்கும்
பொதுவான குளத்தில், மௌக்லியும் தண்ணீர் அருந்த வர, பல விலங்குகள் முதல்
முறையாக மௌக்லியைப் பார்க்கிறார்கள். ஷேர்கான் என்ற புலியோ , அன்றே
மௌக்லியை கொல்ல வேண்டும் என முடிவெடுக்கிறது. கருஞ்சிறுத்தை பகீரா
உதவியுடன் மௌக்லியை தப்பிக்க வைக்கின்றன ஓநாய்கள்.
மனித இனத்தைச் சேர்ந்த குட்டிப்பையன் என்பதால் என்றாவது மிருகத்திற்கு இறையாகிவிட வாய்ப்பிருப்பதால், மனிதர்கள் வாழும் பகுதியில் மெளக்லியை விடுவதற்காக பகீரா அழைத்துச்செல்கிறது. அதன்பிறகு மெளக்லி காட்டிலிருந்து வெளியேறினானா? அவனுக்கான இடம் எதுவென்பதே ஜங்கிள் புக்! இந்த பயணத்தில் மெளக்லி சந்திக்கும் பாம்பு, கரடி, ஓரங்குட்டான், குரங்கு கூட்டம் என்ற காட்டுக்குள் நம்மை ஜாலியாக ஒரு ட்ரிப் அடிக்க வைக்கிறது இந்த 3டி படம்.

ஆங்கிலத்தில் ஸ்கார்லெட் ஜொஹான்சனும், இந்தியில் பிரியங்கா சோப்ராவும்
குரலுதவி செய்து இருக்கும், கா என்ற பாம்பு கதாப்பாத்திரம் சில நிமிடங்களே
வந்தாலும், ” ட்ரஸ்ட் மீ “ என ஹிஸ்ஸி வாய்ஸீல் சொல்லிக்கொண்டே மௌக்லியை தன்
உடலை வைத்து நெருக்கும் காட்சி என எல்லாம் திகில் ரகம்.
ஆங்கிலத்தில் இருக்கும் எல்லா வார்த்தையும் பேசத்தெரிந்த மிருகங்கள் ஏனோ நெருப்பை மட்டும் சிவப்பு பூ என இன்னமும் சொல்லிக்கொண்டு இருப்பது, சின்னத்தம்பி படத்தில் பிரபுவுக்கு தாலி என்றால் மட்டும் என்னவென தெரியாது என்பது போல் தான் இருக்கிறது என்றெல்லாம் யோசிக்காமல் குழந்தைகளுக்கான படத்தை, குழந்தைகளாகவே மாறிப்பாருங்கள், நெருப்பு என்ற வார்த்தையை விட சிவப்பு பூ நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

மனிதர்களின் கால்தடம் பதியாத அடர்காடுகளில் வாழும் மிருகங்களின் வாழ்கையை
கற்பனையில் நம் கண்முன் கொண்டுவரும் இந்த ஜங்கிள்புக் கண்டிப்பாக இக்கால
குழந்தைகளுக்கும், அக்கால குழந்தைகளுக்கும் பிடிக்கும்.